இது கதிர்வேலின் காதல் படத்தின் கதை இவ்வளவுதான்!

Sunday 21st, July 2013 / 16:09
FacebookTwitterGoogle+PinterestEmailReddittumblr

3

பொதுவாக தங்கள் படத்தின் கதையைப்ப்பற்றி வாய் திறக்க மாட்டார்கள் இயக்குனர்கள். ஆனால் இதில் அறிமுக இயக்குனர் பிரபாகரன் நம்பிக்கை இல்லாதவர் போலும்! சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து இயக்கி வரும் படம் ‘இது கதிர்வேலின் காதல்’. ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் இது! நயன்தாரா ஹீரோயின். சந்தானம், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இசை உதயநிதியின் ஃபெவ்ரிட் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ். மொத்த படத்தையும் ஒரே மூச்சில் முடித்து விட்டார்கள். கதையை என்ன என்று கேட்டதுமே கொஞ்சம் கூட பின்வாங்காமல் திரைக்கதை புட்டுப் புட்டு வைத்தார் பிரபாகரன்…

“தந்தை மகனின் பாசப்போராட்டம்தான் ஒன்லைன். ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னை தந்தையிடம் இருந்து பிரிஞ்சுடுவாளோன்னு பயம் உதயநிதிக்கு. அதனால ஆஞ்சநேய பக்தனாகி பெண்களையே ஏறெடுத்து பார்க்குறதில்லை. மகனுக்கு எப்படியாது ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சு பாக்கணும்னு அப்பாவோட ஆசை. அதனால சந்தானம் மூலமா மகனை காதலிக்க தூண்டுறார். சந்தானம் போடும் எல்லா லவ் பிளானிலிருந்தும் தப்பிக்கும் உதயநிதி “ஆபரேஷன் நயன்தாரா” பிளானில் இருந்து தப்ப முடியாமல் மாட்டிக் கொள்கிறார். கடைசியில ஜெயிச்சது தந்தை பாசமா, காதலா அல்லது இரண்டுமா என்பதுதான் படத்தோட கிளைமாக்ஸ்” என்கிறார்! மறுபடியும் இந்த டீம் வெற்றியை பறிச்சுருவாங்க போல இருக்கே!

Tell Us How Your Feel About This Story

Upcoming Community Events

LIKE US ON FACEBOOK

Search the Business DirectoryMost Viewed